செய்திகள்

வெளியானது 'குக் வித் கோமாளி 3' நிகழ்ச்சியின் 2வது ப்ரமோ

17th Jan 2022 03:12 PM

ADVERTISEMENT

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 22 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மனோபாலா, பாடகர் அந்தோனி தாசன், நடிகர் கருணாஸின் மனைவியும் நடிகையுமான கிரேஸ், நடிகர் சந்தோஷ் பிரதாப், வித்யூ ராமன், பாரதி கண்ணம்மா ரோஷினி, கனா பட நடிகர் தர்ஷன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

இதையும் படிக்க | அனிருத்தின் 25வது படம்: கொண்டாடும் ரசிகர்கள்

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியானது. முதல் ப்ரமோவில் நடிகை ரோஷ்னியை கோமாளிகள் வரவேற்கின்றனர். புகழ் பாணியில் ஒரு சிலர் ரோஷ்னியிடம் சென்று கைகொடுக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT