செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷின் மாறன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

13th Jan 2022 07:07 PM

ADVERTISEMENT

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் கிருஷ்ணகுமார், மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

இதையும் படிக்க | அஸ்வின் குமாரின் 'என்ன சொல்ல போகிறாய்' - திரை விமர்சனம் : காதலில் இவ்வளவு பிரச்னைகளா ?

இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் பாடியுள்ள பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT