செய்திகள்

கார்த்தியின் 'கைதி' ஹிந்தி ரீமேக் - ஹீரோ யார் தெரியுமா?

12th Jan 2022 02:39 PM

ADVERTISEMENT

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை கைதி திரைப்படம் பதிவு செய்தது. 

இந்தப் படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்ற பெயரில் ரீமேக்காகிறது. தமிழில் கைதி படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை தர்மேந்திரா சர்மா இயக்குகிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சமந்தா போல பிரபல ஹீரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கன் ஐயப்ப பக்தர் போல உடைணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT