செய்திகள்

ஆர்ஆர்ஆர் திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு

1st Jan 2022 06:32 PM

ADVERTISEMENT

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு ஒமைக்ரான் கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர்.பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இதையும் படிக்க | கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

இந்தப் படத்தின் வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்திற்கான விளம்பர வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

ADVERTISEMENT

 

இந்நிலையில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இந்தப் படம் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக படக்குழு விளக்கமளித்துள்ளது. அதில் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சரியான நேரத்தில் திரைப்படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சிவகார்த்திகேயனின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இயக்குநர், இசையமைப்பாளர் விவரம் இதோ

ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியீட்டு தேதி பின்னர் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT