செய்திகள்

'மாஸ்டர்' படத்துக்கும் 'வலிமை' படத்துக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா?

1st Jan 2022 05:31 PM

ADVERTISEMENT

 

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்தப் படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக் கூடியது. 

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கும் 'வலிமை' படத்துக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதன் படி மாஸ்டர் திரைப்படமும் கடந்த வருடம் ஜனவரி 13 ஆம் தேதி தான் வெளியானது. மாஸ்டர் படத்துக்கும் தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்திருந்தது.

மேலும் மாஸ்டர் திரைப்படமும் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக் கூடியது உள்ளிட்ட ஒற்றுமைகளை ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர். இதனால் மாஸ்டர் படம் அளவுக்கு வலிமையும் வெற்றிபெறும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு பிறகு பிரபல ஹீரோவுக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா - ''இது மாநாடு 2''

வலிமை படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT