செய்திகள்

இயக்குநராக அறிமுகமாகும் மோகன்லால்: வெளியானது 'பரோஸ்' டீசர் விடியோ

1st Jan 2022 03:20 PM

ADVERTISEMENT

 

இந்திய அளவில் மிகச் சிறந்த நடிகர்கள் எனப் பட்டியிலிட்டால் மோகன்லாலின் பெயர் முதல் சில இடங்களுக்குள் இருக்கும். தனது நடிப்பாற்றலால் எந்த வேடத்தையும் மிக தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துவிடுவார். 

இந்த நிலையில் முதன் முறையாக மோகன்லால் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். பரோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ப்ரமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | மீண்டும் இணையும் 'கோமாளி' பட கூட்டணி

வரலாற்றுப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார்.  இந்த படம் 3டியில் உருவாகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT