செய்திகள்

மீண்டும் இணையும் 'கோமாளி' பட கூட்டணி

1st Jan 2022 02:51 PM

ADVERTISEMENT

 

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் கோமாளி. வருவாய் ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனையடுத்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்தை இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இதையும் படிக்க | தள்ளிப்போகிறது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஆர்ஆர்ஆர்' வெளியீடு: காரணம் என்ன ?

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தப் படத்தில் யோகி பாபு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோமாளி படத்துக்கு பிறகு யோகி பாபு, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இணையவிருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT