செய்திகள்

'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட டைட்டானிக் காட்சி இப்படிதான் உருவானது - ''என்னவச்சு காமெடி பண்றீங்களே...''

23rd Feb 2022 02:35 PM

ADVERTISEMENT

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. ஒரு ஆண் இரண்டு பெண்ணை காதலிப்பதால் உண்டாகும் விளைவுகளை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது.

ராம்போ என்ற கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும், கண்மணியாக நயன்தாராவும்,  கடிஜா என்ற வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இந்தப் படத்திலிருந்து டுடுடு, நான் பிழை பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் இந்தப் பட டீசரும் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

இதையும் படிக்க | ''நயன்தாரா இங்க இல்ல, அவங்களுக்காக நான் சொல்றேன்'': சமந்தாவின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்தப் படத்தில் டைட்டானிக் பட காட்சியை நியாபகப்படுத்துவது போல கப்பலின் முனையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலானது. இந்தக் காட்சியை படமாக்கிய விதத்தை விடியோவாக விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், நான் ஜாக் மற்றும் இரண்டு ரோஸ்களை வைத்து டைட்டானிக் உருவாக்கியபோது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த விடியோவில் படப்பிடிப்புத் தளத்துக்கு வரும் நயன்தாரா படக் குழுவினரிடம், என்னவச்சு காமெடி பண்றீங்களே என்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

ADVERTISEMENT
ADVERTISEMENT