செய்திகள்

''நயன்தாரா இங்க இல்ல, அவங்களுக்காக நான் சொல்றேன்'': சமந்தாவின் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

23rd Feb 2022 01:11 PM

ADVERTISEMENT

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

இந்தப் படத்தில் ராம்போவாக விஜய் சேதுபதியும் கண்மணியாக நயன்தாராவும் கடிஜாவாக சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

இதையும் படிக்க | ''எல்லா புகழும் அவருக்கே'': 15வது ஆண்டில் பருத்தி வீரன்: கார்த்தி நெகிழ்ச்சி

ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று 22 ஆம் தேதி 2 ஆம் மாதம், 2022 ஆம் வருடத்தை முன்னிட்டு நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், 22.02.2022 அன்று 20.02 மணி நேரத்தில் சிறப்பான நாள். நம்முடைய நட்புக்காக நயன்தாரா. நயன்தாரா சமூக வலைதளங்களில் இல்லை. ஆனால் அவர் தனது அன்பை உங்களுக்கு(ரசிகர்களுக்கு) அனுப்பியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT