செய்திகள்

இந்தக் காட்சிகள்லாம் 'வலிமை' படத்துல இருக்காதா? வெளியான தகவல்கள்

17th Feb 2022 04:59 PM

ADVERTISEMENT

 

நடிகர் அஜித் குமார் நடித்து வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்தப் படத்தில் பைக் சாகச வீரர்களுக்கும் அஜித்துக்கும் இடையேயான 4.21 நிமிட  காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சி மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அஜித் பைக்கில் பறக்கும் 4 நொடி காட்சி, 2 நொடி காட்சியாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்கள் மோதி கொள்ளும் காட்சியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. காரின் மேற்பகுதியில் துணியை எரிக்கும் காட்சி, மாணவர்கள் கைப்பந்து விளையாடும்போது அஜித் பந்தை தூக்கிப்போடும் காட்சி ஆகியவை படத்தில் நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | வனப் பகுதியில் 1080 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்த பிரபல நடிகர்

ADVERTISEMENT

வலிமை படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக் கூடியது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT