செய்திகள்

சென்னை மெட்ரோ ரயிலில் 'வலிமை': 'வேற மாறி' களமிறங்கிய படக்குழு

17th Feb 2022 11:45 AM

ADVERTISEMENT

 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை மெட்ரோ ரயிலில் வலிமை பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் மதுரை ரயில் நிலையத்திலும் வலிமை விளம்பர போஸ்டர்கள் வைக்கப்பட்டு, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

இதையும் படிக்க | விண்ணைத்தாண்டி வருவாயா' நடிகர் மரணம்: ரசிகர்கள் இரங்கல்

ADVERTISEMENT

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் மேற்கொள்கிறார். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். 

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகப்போகும் அஜித் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT