செய்திகள்

இரட்டை வேடங்களில் தனுஷ் ? 'நானே வருவேன்' பட புதிய போஸ்டர்

11th Feb 2022 01:07 PM

ADVERTISEMENT

 

'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கி வரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. போஸ்டரில் தாடியுடன் கண்ணாடி அணிந்து ஒரு தோற்றத்திலும், தாடி மீசை இல்லாமல் இளமையான தோற்றத்திலும் என இரண்டு விதமான தோற்றங்களில் தனுஷ் இருக்கிறார்.

இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' பட டீசர் இதோ

ADVERTISEMENT

இதனால் இந்தப் படத்தில்  தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா அல்லது இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

நானே வருவேன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT