செய்திகள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி!: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

10th Feb 2022 06:24 PM

ADVERTISEMENT

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கும் நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது, ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்குவதை அதிகாரப்பூர்வமாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

அனிருத் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

இருப்பினும், நெல்சனுடன் ரஜினி இணைந்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

#Thalaivar169BySunPictures:

 https://t.co/EFmnDDnBIU

Presenting Superstar @rajinikanth’s #Thalaivar169 directed by @Nelsondilpkumar and music by @anirudhofficial

— Sun Pictures (@sunpictures) February 10, 2022

 

ADVERTISEMENT
ADVERTISEMENT