செய்திகள்

''விஜய் இதையெல்லாம் கண்டித்திருக்கிறாரா?'' சீமான் ஆவேசம்

9th Feb 2022 11:35 AM

ADVERTISEMENT

 

விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த சீமான், ''விஜய் என்னுடைய தம்பி. கோட்பாட்டு அளவில் நான் வேறு, அவர் வேறு. என்னுடைய தலைவர் பிரபாகரன். அவரைப் பற்றி விஜய் பேசுவாரா? என் நிலத்தைக் காப்பாற்ற நான் துடிக்கிறேன். 

ஆற்று மணலை விற்பனை செய்வதைக் கண்டித்திருக்கிறீர்களா ? நீரை ஊறிஞ்சி விற்பதை கூடாது என்றிருக்கிறீர்களா ? அவருடைய கோட்பாடு என்னவென்று தெரியாமல் அவருக்கும் எனக்கும் போட்டி என்று எப்படி சொல்வீர்கள் ? 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சி

பாரதிய ஜனதா உட்பட இந்தியாவை ஆண்ட கட்சி, ஆள்கின்ற கட்சியை எதிர்த்து வருகிறேன். ஒரு நடிகராக எம்ஜிஆர் வென்றதற்கு காரணங்கள் இருக்கிறது. பெரியார், அண்ணா, முத்துராமலிங்கா தேவர் உள்ளிட்ட தலைவர்கள் மரணித்துவிட்டார்கள். அந்த இடம் காலியாகிவிட்டது. கருணாநிதி மட்டும்தான் ஆட்சியில் இருந்தார். அவரை எதிர்க்க வலிமையான ஆற்றல் தேவைப்படுகிறது. 

எம்ஜிஆருக்கே தயக்கம் இருந்தது. ரசிகர்கள் கொடுத்த நம்பிக்கையால் அரசியல் களமிறங்கி வென்றுவிடுகிறார். ஒரே தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் வரலாறு இனி நிகழ சாத்தியமில்லை.

இதையும் படிக்க | ஆஸ்கர் இறுதிப் பட்டியல்: ஜெய்பீம் இடம்பெறவில்லை -ரசிகர்கள் ஏமாற்றம்

இதைவிட புகழ்பெற்ற நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் தாக்குபிடிக்க முடியவில்லை. எம்ஜிஆர் மற்றும் என்டிஆர் வந்ததும் ஒரு விபத்து. விபத்து வேறு, விதி வேறு. கமல்ஹாசன் 5 வயதிலிருந்து நடிக்கிறார். அவர் உலகப் புகழ்பெற்ற நடிகர். அவரையே மக்கள் அங்கீகரிக்கவில்லை. 

ரஜினிகாந்த்தும் விலகிவிட்டார். என் தம்பி வந்தாலும், அவர் என்ன கோட்பாட்டை வைக்கிறார் என்பது முக்கியம்'' என்று பேசினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT