செய்திகள்

'டைகர்' படத்துக்காக விக்ரம் பிரபுவுடன் மீண்டும் இணையும் இயக்குநர் முத்தையா

1st Feb 2022 03:36 PM

ADVERTISEMENT

 

குட்டிபுலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் முத்தையா. கடைசியாக விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தை இயக்கியினார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. 

இந்தப் படத்தையடுத்து சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதையும் படிக்க | விஷ்ணு விஷால் படத்தை பெரிய தொகை கொடுத்து கைப்பற்றிய அமேசான் பிரைம்

ADVERTISEMENT

இந்த நிலையில் இயக்குநர் முத்தையா அடுத்ததாக விக்ரம் பிரபு நடிக்கும் படமான டைகர் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் இயக்குகிறார். 

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். இருவரும் வெள்ளைக்காரத்துரை படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT