செய்திகள்

விஜய்யை பின்பற்றும் சிவகார்த்திகேயன் ? ரசிகர்கள் கருத்து மோதல்

1st Feb 2022 12:50 PM

ADVERTISEMENT

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு விடியோவில் ஜலபுலஜங்கு பாடல் காட்சி இடம்பெற்றிருந்தது. 

இந்த விடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் மாஸாக நடந்து வர அவரை கல்லூரி மாணவர்கள் வரவேற்பர். இது மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலை நினைவுபடுத்துவதாக விவாதங்கள் எழுந்துள்ளது. 

இதனையடுத்து நடிகர் விஜய்யின் ரசிகர்களும் சிவகார்த்தியேன் ரசிகர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொருபுறம் ரஜினி ரசிகர்களும் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலே, பேட்ட பட மாஸ் மரணம் பாடலை நினைவுபடுத்துவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் மூன்று பாடல்களுக்கும் அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'நானே வருவேன்' பட பாடல்கள் குறித்து இயக்குநர் செல்வராகவன் தகவல்

டான் படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஆர்ஆர்ஆர் படமும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் டான் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். டான் படத்தை தெலுங்கிலும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆர்ஆர்ஆர் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் டான் படம் கவனம் பெறாமல் போக வாய்ப்பிருக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT