செய்திகள்

'தெரிந்தே சாதிய கொடுமைகள் நடக்கிறது’: பா.ரஞ்சித்

30th Dec 2022 12:35 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் பல இடங்களில் சாதிய கொடுமைகள் தெரிந்தே நடைபெறுகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மார்கழியில் மக்களிசை - 2022 நிகழ்வின் இரண்டாம் நாள் துவக்க விழாவில் பங்குபெற்ற இயக்குநர் பா.ரஞ்சித் புதுக்கோட்டை தீண்டாமை சம்பவத்தைக் குறிப்பிட்டு ”நான் ஒரு நாத்திகன். ஆனால், கோவிலுக்குள் செல்லக்கூடாது என்பது தவறு. இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வுகொடுத்த ஆட்சியருக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் சமூகநீதி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் பல இடங்களில் தெரிந்தே சாதிய கொடுமைகள் நடந்து வருகின்றன” என்றார்.

பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

Tags : Pa Ranjith
ADVERTISEMENT
ADVERTISEMENT