செய்திகள்

தொழிலதிபரை மணக்கும் பிரபல தொகுப்பாளினி?

29th Dec 2022 12:43 PM

ADVERTISEMENT

 

பிரபல தொகுப்பாளினி  இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி மற்றும் புரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் நடிகை திவ்ய தர்ஷ்னி(டிடி). 

விசில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதன்பின் தொகுப்பாளினி பணியை மேற்கொண்டு வருகிறார்.  தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’, சுந்தர்.சியின் ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து விவாகரத்துப் பெற்ற திவ்ய தர்ஷ்னி விரைவில் கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மறுமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன்?

ஆனால், இதுகுறித்து டிடி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT