செய்திகள்

அருண் விஜய்யின் ‘பார்டர்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

29th Dec 2022 11:34 AM

ADVERTISEMENT

 

அருண் விஜய் நடிப்பில் உருவான பார்டர் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘பார்டர்’ திரைப்படம் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.

தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிச் சென்றபடியே இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இப்படம் 2023, பிப்.24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்யுடன் ரெஜினா காசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி,எஸ் இசையமைத்துள்ளார்.
 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT