செய்திகள்

மதுபோதையில் விமானத்தில் அத்துமீறிய பிரபல நடிகர்

14th Dec 2022 04:25 PM

ADVERTISEMENT

 

மதுபோதையில் பிரபல மலையாள நடிகர் விமானத்தில் அத்துமீறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. ‘அன்னையும் ரசூலும்’, ‘கம்மட்டிபாடம்’, ‘இஷ்க்’, ‘குருப்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஷைன். 

ADVERTISEMENT

இந்நிலையில், இவர் நடிப்பில் உருவான ’பாரத சர்க்கஸ்’ திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக துபை சென்றுள்ளார். அப்போது, நடுவானில் திடீரென விமானிகள் அறையை திறந்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இயக்குநராகும் சிவகார்த்திகேயன்... எந்தப் படத்தில்?

இதைக் கண்ட விமானிகள் அவரிடம் விசாரித்தபோது ‘விமானிகள் அறையை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட வந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பின், துபை சென்றதும்  ஷைன் டாம் சாக்கோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். விசாரணையில் சாக்கோ மதுபோதையில் இருந்தது தெரிய வந்ததால் அவரை எச்சரித்து மீண்டும் அடுத்த விமானத்தில் கேரளம் அனுப்பிவைத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT