செய்திகள்

நாயகனாக மாறிய பிரபல ஜோதிடர்!

14th Dec 2022 06:14 PM

ADVERTISEMENT


பிரபல ஜோதிடரான ஷங்கர் நாராயண் நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். விஜய் சங்கர் என்ற பெயரில் 'தனித்திரு' என்ற குறும்படத்தில் அவர் நடித்துள்ளார். 

எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் பயின்றவரும், கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருமான, இயக்குநர் எஸ்.கே.செந்தில் 'தனித்திரு' படத்தை இயக்கியுள்ளார். 

ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து 'தனித்திரு' படம் எடுக்கப்பட்டுள்ளது. தனியொரு கதாபாத்திரம் மட்டுமே நடித்திருந்தாலும், இந்த குறும்படத்தின் பின்னணியில் பல திரைப் பிரபலங்கள் பணிபுரிந்துள்ளனர்.

ADVERTISEMENT

அதன்படி, பேராண்மை, வாகா, மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர். செந்தில் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நான், இறுதிச்சுற்று, நாச்சியார், வர்மா, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களின் படத்தொகுப்பாளரான சதிஷ் சூர்யா, நடிகரும் இசையமைப்பாளருமான விது பாலாஜி உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். கலை - ரெமியான், ஒலிப்பதிவு - டி. உதயகுமார்.

நடிகர் ராஜேஷ், தயாரிப்பாளர் கேயார், இயக்குநர்கள் ஜிஎன்ஆர் குமரவேலன், பிரியா.வி, மனோஜ் கிருஷ்ணா உள்ளிட்டோர் முன்பு எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் 'தனித்திரு' படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்புகளைப் பெற்றது. 

'தனித்திரு' படத்தை இயக்கிய எஸ்.கே.செந்தில், அடுத்ததாக, அனைத்து வயதினரையும் கவரும் வகையில், முழு நீள நகைச்சுவைப் படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT