சலூன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
’சென்னை 600028’, ’தமிழ் படம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. அதன்பின் அவருடைய நடிப்பில் வெளியான ‘வணக்கம் சென்னை’, ‘தமிழ் படம் 2’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
தற்போது முத்துக்குமரன் இயக்கத்தில் ‘சலூன் - எல்லாம் மயிரும் ஒன்னுதான்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.