செய்திகள்

காந்தாரா விமர்சனத்துக்கு ராஷ்மிகாவின் பதில்!

10th Dec 2022 10:39 AM

ADVERTISEMENT

 

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. தற்போது, நடிகர் விஜய் உடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து விட்டார். அவர் முதன்முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டதாக கன்னட ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர். ராஷ்மிகாவின் முதல் படம் கிர்க் பார்டி எனும் கன்னட படத்தை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி. சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாகிய ‘காந்தாரா’ படத்தினை இயக்கியவரும் இவர்தான் ரிஷப் ஷெட்டி.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு பேட்டியில் ராஷ்மிகாவிடம் காந்தாரா படத்தினை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு இன்னும் பார்க்கவில்லை என பதிலளிப்பார். இதனால் கன்னட ரசிகர்கள் ராஷ்மிகாவை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர். மேலும் இனிமேல் கன்னட படத்தில் ராஷ்மிகா நடிக்க கூடாதெனவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து ராஷ்மிகா கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

என்னை விமர்சிப்பவர்களுக்கு என்னிடம் இருந்து தருவதற்கு அன்பை தவிர எதுவுமில்லை. காந்தாரா வெளியான 2-3 நாட்களிலே படத்தை பார்த்து விட்டீர்களா என கேட்டார்கள். அப்போது பார்க்க முடியவில்லை. பிறகு படம் பார்த்துவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து கூறினேன். அவர்களும் நன்றி தெரிவித்தனர். எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் காமிரா வைத்து வெளியே காட்ட முடியாது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT