செய்திகள்

பாலிவுட் ஹீரோவுடன் பூஜா ஹெக்டே காதல்?

9th Dec 2022 02:56 PM

ADVERTISEMENT

 

பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே பாலிவுட் கதநாயகனுடன் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் பரவுகின்றன. 

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ஆலா வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். 

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.   

படிக்கதனுஷுடன் இணையும் சஞ்சய் தத்?

இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் உடன் 'சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இதனிடையே தமிழில் அஜித் குமார்  நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்கிறார். 

மேலும், இதோடு மட்டுமல்லாமல் சல்மான் கான் தயாரிக்கவுள்ள 2 படங்களிலும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி அடுத்தடுத்து சல்மான் கானுடன் ஒப்பந்தமாவதால், அவர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரிடையே காதல் துளிர்த்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவத்தொடங்கியுள்ளன.

எனினும் சல்மான் கான் - பூஜா ஹெக்டே தரப்பில் இது குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லல். மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT