செய்திகள்

ஆசியன் அகாதெமி விருது பெற்றார் இயக்குநர் பாசில் ஜோசஃப்

9th Dec 2022 04:27 PM

ADVERTISEMENT

 

சிறந்த இயக்குநருக்கான ஆசியன் அகாதெமி விருதைப் பெற்றார் பாசில் ஜோசஃப்.

மலையாள இயக்குநரனான பாசில் ஜோசஃப் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் டோவினோ தாமஸை நாயகனாக வைத்து ‘மின்னல் முரளி’ என்கிற திரைப்படத்தை எடுத்தார்.

இதையும் படிக்க: துணிவு ’ஜில்லா..ஜில்லா’ வெளியீட்டு நேரம் குறித்து தகவல்

ADVERTISEMENT

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என 5 மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ஆசியன் அகாதெமியின் சிறந்த இயக்குநர் விருது ‘மின்னல் முரளி’ படத்திற்காக பாசில் ஜோசஃப்க்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பாசில் ஜோசஃப் நடிகராகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் ரூ.50 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT