செய்திகள்

‘அன்பு இளவல்’: பா.ரஞ்சித்துக்கு திருமாவளவன் வாழ்த்து

8th Dec 2022 02:28 PM

ADVERTISEMENT

இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பா. ரஞ்சித்தின் 40-வது பிறந்தநாளையொட்டி தங்கலான் படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பா.ரஞ்சித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ”வீட்டில் வற்புறுத்துகிறார்கள்.. ஆனால்” திருமணம் குறித்து தமன்னா விளக்கம்

ADVERTISEMENT

இந்நிலையில், திருமாவளவன் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “இன்று பிறந்தநாள் காணும் அன்பு இளவல் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு இனிய வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT