செய்திகள்

நயன்தாராவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி

8th Dec 2022 06:02 PM

ADVERTISEMENT

 

நயன்தாராவின் புதிய தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கியுள்ள படம் - கனெக்ட். 

ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  

ADVERTISEMENT

இடைவேளை இல்லாத இத்திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தோற்றப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில், நயன்தாரா ஒடுங்கிய முகத்துடன் மிக ஒல்லியான தோற்றத்தில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

பலரும் இணையத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். 

அதேநேரம், இப்படத்தில் நயன்தாரா தாயாக நடித்திருப்பதால் வயது அதிகமாக தெரிய வேண்டும் என்பதற்காக இந்தத் தோற்றத்தில் நடித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT