செய்திகள்

கமல்ஹாசன் - மகேஷ் நாராயணன் படத்தின் நிலை என்ன?

8th Dec 2022 04:25 PM

ADVERTISEMENT

 

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் நடிகர் கமல்ஹாசன் ‘மாலிக்’ பட இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கமல் இந்தியன் - 2 படத்தில் நடிக்கத் துவங்கினார். அதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் வேளையில் அவர் அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ள அறிவிப்பை வெளியிட்டார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: 2022-ல் யூடியூப்பை ஆக்கிரமித்த விஜய் பட பாடல்!

இதனால், சில நாள்களாக மகேஷ் நாராயணன் உடனான படம் கைவிடப்படுவதாக சமூக வலைதளங்களில்  தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில்,  இயக்குநர் மகேஷ் நாராயணன் நேர்காணல் ஒன்றில் ‘கமல் சார் உடனான படம் கைவிடப்படவில்லை. படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாக துவங்க உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT