செய்திகள்

பாபா அதிகாலைக் காட்சிகள் 'ஹவுஸ்புல்’

8th Dec 2022 03:08 PM

ADVERTISEMENT

 

ரஜினியின் ‘பாபா’ திரைப்படத்தின் அதிகாலைக் காட்சிளுக்கான முன்பதிவு முடிந்துவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

ADVERTISEMENT

பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் மறு படத்தொகுப்பும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை புதுப்பொழிவுடன் மேம்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க | 'பொன்னியின் செல்வன் - 2' படப்பிடிப்பு குறித்து தகவல்

பாபா படத்தின் புதிய டிரைலர் மீண்டும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில், ரஜினியின் பிறந்த நாளையொட்டி டிசம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், சென்னை உள்பட சில ஊர்களில் இதற்கான அதிகாலைக் காட்சி டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுள்ளது.

Tags : rajini baba
ADVERTISEMENT
ADVERTISEMENT