செய்திகள்

'டிஎஸ்பி' தோல்வி: கமெண்ட்ஸ் ஆஃப் செய்துவிட்டு பதிவிடும் விஜய் சேதுபதி

7th Dec 2022 03:49 PM

ADVERTISEMENT

 

டிஎஸ்பி திரைப்படம் தோல்வியை அடைந்ததால் நடிகர் விஜய் சேதுபதி தன் டிவிட்டர் பக்கத்தில் கமெண்ட்ஸ் ஆஃப் செய்துவிட்டு பதிவிட்டு வருகிறார்.

விஜய் சேதுபதி கடைசியாக நடித்த 'கடைசி விவசாயி', விக்ரம், 'மாமனிதன்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதனைத் தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில்  ‘டிஎஸ்பி’ படத்தில் நடித்திருந்தார். கடந்த டிச.2 ஆம் தேதி வெளியான அப்படம் கடுமையான தோல்வியைச் சந்தித்தது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: ’இடைவேளை இல்லை’ நயன்தாரா படம் குறித்து தகவல்

ஆனால், படக்குழுவினர் ஒரே நாளில் படத்தின் வெற்றியைக் கொண்டாடியதால் இணையவாசிகள் சிலர் ‘டிஎஸ்பி’ படத்தை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் டிவிட்டர் பக்கத்தை நிர்வாகிக்கும் அட்மின் டிஎஸ்பி படம் குறித்து பதிவுகளை பதிவிடும்போது கமெண்ட்ஸ் ஆஃப் செய்துவிட்டு பதிவிட்டு வருகிறார். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT