செய்திகள்

’விஜய் 67’ கதை இதுதானா? கசியும் தகவல்

7th Dec 2022 01:32 PM

ADVERTISEMENT

 

விஜய் 67 திரைப்படத்தின் கதை குறித்து சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படிக்க- வணங்கான் - சூர்யாவுக்கு பதில் பிரபல நடிகர் ஒப்பந்தம்!

ADVERTISEMENT

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் டிச.5 ஆம் தேதி நடைபெற்றது.

மேலும், விஜய் 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் 50 வயது கதாபாத்திர தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் எதிர்பாராத சமயத்தில் குடும்ப தலைவன் எப்படி ஒரு கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதை கருவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க- மிகப் பிரபலமான இந்திய நடிகர்: முதலிடத்தில் தனுஷ்!

மேலும், ஹாலிவுட் படமான ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ படத்தின் தழுவலாகவும் இப்படம் இருக்கலாம் என்றும் சில தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதேநேரம், இப்படத்தில் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்களும் நடிக்க உள்ளதால் படத்தின் கதையும் அதற்கேற்ப பெரிதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT