நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடித்து வந்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’ விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க | சர்தார் வெற்றி: இப்படி ஒரு பரிசா? படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கார்த்தி
தமிழில் ஃபர்ஹானா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாம்ராட் சக்கரவர்த்தில் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தியில் ‘மாணிக்’ என்கிற புதிய படத்தில் நாயகியாக நடித்து வந்தார். தற்போது, தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு டாடி என்கிற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.