செய்திகள்

’சேனாதிபதி...’ கமல்! வெளியான இந்தியன் - 2 புகைப்படம்

7th Dec 2022 06:05 PM

ADVERTISEMENT

 

இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிகாரில் நடைபெற்று வருகிறது. அங்கு சேனாதிபதி கதாபாத்திர தோற்றத்தில் கமல் நடந்து வரும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT