செய்திகள்

‘நீ இதப் பண்ணிட்டியா, நான் இதப் பண்றேன் பாரு’-அனிருத்திடம் சவால் விட்ட தமன்!

6th Dec 2022 03:15 PM

ADVERTISEMENT

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

வாரிசு படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி 8.5 கோடி (85 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலையில் சிம்பு குரலில் வெளியானது. இந்தப் பாடலும் 1.6 கோடி (16 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அனிருத் விஜய் படங்களுக்கென்று தீம் மியூசிக் இசையில் ஒரு முத்திரையை பதித்துவிட்டார். தற்போது தமன் இதை தாண்டுவாரா என்பதே ரசிகர்களின் கேள்வி. இந்நிலையில் தமன் ஒரு நேர்காணலில்,“நீ இதைப் பண்ணிட்டியா. சரி நான் இதைப் பண்றேன் பாரு. எனக்கு தளபதி விஜய் மேல லவ் எவ்ளோ இருக்குனு காட்டுற நேரம். அனிருத் கிட்ட பேசும்போதெல்லாம் வாரிசு ஆல்பம் கேளு” என ஜாலியாக சவால் விடுவேனென கூறியுள்ளார். ரசிகர்கள் இந்த விடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தமன் நிரூபித்துவிட்டார் என பதிவிட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT