செய்திகள்

ஹரி வைரவன் குழந்தை கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட விஷ்ணு விஷால்!

6th Dec 2022 04:57 PM

ADVERTISEMENT

 

நடிகர் ஹரி வைரவன் குழந்தையின் கல்விச் செல்வை ஏற்பதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்' ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன்.

'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தில் பிரபல பரோட்டா காமெடியில் இவர் நடித்தது அதிகம் பேசப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஹரி வைரவனுக்கு 2 வயதில் யோஷினி ஸ்ரீ என்கிற பெண் குழந்தை உள்ளது.

இதையும் படிக்க: விடுதலை படப்பிடிப்பில் விபத்து: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

இந்நிலையில், அக்குழந்தையின் வருங்காலத்திற்கான கல்விச்செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கடந்த 6 மாதமாக தன்னால் முடிந்த உதவியை ஹரி வைரவனுக்கு செய்து வந்ததாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT