செய்திகள்

’அந்தப் படத்தை 100 தடவை பார்த்துட்டேன்’ விஜய் சேதுபதியுடன் நடிக்க பிரபல ஹிந்தி நடிகை விருப்பம்

6th Dec 2022 05:53 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க பிரபல ஹிந்தி நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டிஎஸ்பி’ திரைப்படம் தோல்வியைச் சந்தித்தது.

இதையும் படிக்க: பாபா மறுவெளியீடு: வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றியது பிரபல நிறுவனம்

ADVERTISEMENT

மேலும், அவர் நடிப்பில் சில படங்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக, மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘மும்பைக்கார்’ , ‘மேரி கிருஸ்துமஸ்’ உள்ளிட்ட ஹிந்தி படங்களும் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர் ”நானும் ரௌடிதான் திரைப்படத்தை 100-வது முறையாக பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு அழைத்து ‘சார் நான் உங்களின் தீவிர ரசிகை. உங்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். எதாவது ஆடிசன் இருந்தால் சொல்லுங்கள் கலந்துகொள்கிறேன்’ என்றேன். அதற்கு அவர் ‘அய்யோ’ என ஆச்சரியப்பட்டார்” என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT