செய்திகள்

ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த சீரியல்? இயக்குநர் கொடுத்த தகவல்

6th Dec 2022 04:11 PM

ADVERTISEMENT

 

வெள்ளித் திரையின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த சின்னத் திரை தொடர் குறித்து இயக்குநர் ஒருவர் சுவாரசியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் நான்காவது தலைமுறையாக நடிகர் ரஜினிகாந்த் நாயகனாகவே நடித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். 

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரு படங்களில் நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். 

ADVERTISEMENT

படிக்கமீண்டும் சீரியல் இயக்கும் 'மெட்டி ஒலி கோபி' திருமுருகன்!

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தை இயக்கிய, இயக்குநர் சிபி சர்க்கரவர்த்தியுடன் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படிக்கஉண்மையான குடும்பம் போல... 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு கிடைக்கும் பாராட்டு!

இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சின்னத் திரை தொடர்களையும் அவ்வபோது பார்த்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த தொடர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்குகிறார். இவர் கோலங்கள் போன்ற மெகா ஹிட் தொடரை இயக்கியவர்.

இது குறித்து ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் திருச்செல்வத்தின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்திடம் சின்னத் திரை தொடர் குறித்து பேசியுள்ளார். 

அப்போது, எதிர்நீச்சல் தொடர் ரஜினிகாந்துக்கு பிடித்த தொடர் என்றும், அதனை குடும்பத்துடன் பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டதாக இயக்குநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார். 

பிற்போக்குத்தனம் கொண்ட பழமைவாத வீட்டில் படித்த இளம்பெண் திருமணம் முடிந்து சென்று வாழும்போது நேரிடும் சவால்களே எதிர்நீச்சல் தொடரின் பின்னணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT