நடிகை கௌதமி மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் தமிழ், மலையாளம் என பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை கௌதமி.
கடந்த 2004 முதல் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வந்த கௌதமி 2016 ஆம் ஆண்டு அவரைப் பிரிந்து தற்போது தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதையும் படிக்க: ‘நீ இதப் பண்ணிட்டியா, நான் இதப் பண்றேன் பாரு’-அனிருத்திடம் சவால் விட்ட தமன்!
மேலும், பாஜகவில் இணைந்து அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், 1998 ஆம் ஆண்டு திருமணமாகி 1999-ல் விவகாரத்து பெற்ற கௌதமி - சந்தீப் பாட்டியா இணைக்கு பிறந்த ஒரே மகளான சுப்பலட்சுமி(23) விரைவில் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக சுப்பலட்சுமி இன்ஸ்டாகிராமில் தன் படங்களை பதிவிட்டு வருகிறார்.