செய்திகள்

அக்‌ஷய் குமாரின் ‘சத்ரபதி சிவாஜி’ புதிய போஸ்டர் வெளியானது!

6th Dec 2022 03:45 PM

ADVERTISEMENT

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மீண்டும் ஒரு சரித்திர படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னனை பற்றிய வரலாற்று படத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சரித்திரப் படமொன்றில் நடிக்க உள்ளார். மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதன் முறையாக மராத்தி படத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வசீம் குரேஷி தயாரிப்பில் மகேஷ் மஞ்சுரேகர் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம் சிவாஜியின் கனவுகளை உணமையாக்க போராடிய 7 வீரர்கள் பற்றியது என படக்குழு தெரிவித்துள்ளது. மாராத்தியில் உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே இந்த பட அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

தற்போது அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் அக்‌ஷய்குமாரின் சத்ரபதி சிவாஜி உருவத்தில் இருக்கும் புதிய போஸ்டரை பகிர்ந்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்தார் அக்‌ஷய். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 2023 தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. மராத்தி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT