திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் படத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படம் விரைவிலேயே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.