செய்திகள்

சிம்பு குரலில் ‘தீ தளபதி’ பாடல் வெளியானது!

4th Dec 2022 04:06 PM

ADVERTISEMENT

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

வாரிசு படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி 8 கோடி (80 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது பாடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிம்பு குரலில் விஜய் நடனத்தில் ‘தீ தளபதி’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். சிம்பு, சாண்டி மாஸ்டரும் நடனமாடியுள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT