செய்திகள்

ரம்யா பாண்டியனின் புதிய தோற்றம்! ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள்!

2nd Dec 2022 05:58 PM

ADVERTISEMENT

 

நடிகை ரம்யா பாண்டியன், வித்தியாசமான முறையில் மேக்கப் செய்துகொண்டு புதிய தோற்றத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த படங்களுக்கு, அவர் பதிவேற்றிய வேறேந்த படங்களுக்கும் இல்லாத வகையில் ஒரே நாளில் 62 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வபோது புதுப்புது தோற்றத்தில் போட்டோஷுட் நடத்துவது வழக்கம். அவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. 

படிக்கமறைந்து 26 ஆண்டுகள்... இன்றும் டிரெண்டிங்கில் 'சில்க் ஸ்மிதா'!

ஆடைகளைக் குறைத்து புகைப்படங்களைப் பதிவேற்றி வரும் ரம்யா பாண்டியன், தற்போது வித்தியாசமான தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். 

இவர் இதற்கு முன்பே புடவை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றியிருந்தாலும், தற்போது ஸ்லீவ்லெஸ் அணிந்தவாறு மாறுபட்ட  முறையில் மேக்கப் செய்துகொண்டு புகைப்படங்களை சற்று வித்தியாசமாக பதிவேற்றியுள்ளார். 

படிக்கதேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நடிகை! குவியும் விமர்சனங்கள்

இந்த புகைப்படங்களுக்கும் அவரின் வழக்கமான படங்களை விட மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் கிளாஸிக் புகைப்படங்களாக இவை உள்ளதாகவும், மிகுந்த அழகுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT