செய்திகள்

7.5 கோடி பார்வைகளைக் கடந்தது ‘ரஞ்சிதமே’ பாடல்

1st Dec 2022 02:27 PM

ADVERTISEMENT

 

வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில்  இதுவரை 7.5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்துக்கு இசை - தமன். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

சமீபத்தில்  'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கைக்கலப்பில் முடிந்த பிக் பாஸ் ‘டாஸ்க்’: மயங்கி விழுந்த அஷீம்!

இந்நிலையில், விஜய் பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 7.5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT