செய்திகள்

விரைவில் நீர்ப்பறவை - 2 : சீனு ராமசாமி அறிவிப்பு!

1st Dec 2022 01:57 PM

ADVERTISEMENT

நீர்ப்பறவை பாகம் - 2 விரைவில் தொடங்கப்படும் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார். 

கடந்த 2002 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் நீர்ப்பறவை. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. மீனவ சமூகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த காதல் கதைக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் நீர்ப்பறவை பாகம் - 2 விரைவில் தொடங்கப்படும் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

நீர்ப்பறவை வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் நீர்ப்பறவை பாகம் - 1ல் நடித்தவர்கள் தான் இந்தப் படத்திலும் இருப்பார்களா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் சமீபத்தில் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | மன அழுத்தம், பதட்டம் அதிகம் உள்ளதா? இந்த 5 விஷயத்தை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

ADVERTISEMENT
ADVERTISEMENT