செய்திகள்

‘கோப்ரா’ படத்தின் கால அளவு வெளியானது!  

28th Aug 2022 02:21 PM

ADVERTISEMENT

 

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் கால அளவு (ரன்னிங் டைம்) 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 3 நொடிகள் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. 

டிமாண்டிக் காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கயிருக்கும் படம் கோப்ரா. விக்ரம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக வெளியிடுகிறார்.

மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, மிருணாளினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 7 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார்.  

ADVERTISEMENT

சமீபத்தில் படத்திற்கு யுஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. தற்போது படத்தின் கால அளவு 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 3 நொடி என தகவல் வெளியாகியுள்ளது. 

கோப்ரா திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. தற்போது படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT