செய்திகள்

காதலருடன் சாகச விடியோவைப் பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்

27th Aug 2022 03:39 PM

ADVERTISEMENT

 

காதலருடன் சாகச விடியோவை நடிகை பிரியா பவானி ஷங்கர் பகர்ந்துள்ளார். 

பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

ADVERTISEMENT

பிரியா பவானி ஷங்கர் 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்துவருகிறார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிக்க | ''இனி ஆண்ட்டி என அழைத்தால்...'' - ரசிகர்களை எச்சரித்த 'புஷ்பா' நடிகை

தற்போது காதலருடன் விடுமுறையைக் கழிக்க வெளிநாடு சென்றுள்ள பிரியா சாகச விடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில் மலைப்பகுதியில் ஹெலிஹாப்டரில் இருந்து பயிற்சியாளருடன் பாராசூட் மூலம் கீழே குதக்கிறார்.

அவரது பதிவில், கடவுள் சிறப்பான விஷயங்களை பயத்தின் மறுப்பக்கத்தில் வைத்திருப்பார் என்ற வில் ஸ்மித்தின் வாசகத்தை பகிர்ந்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் 'அகிலன்', எஸ்.ஜே.சூர்யாவுடன் 'பொம்மை' படங்களில் நடித்துள்ள பிரியா பவானி ஷங்கர், 'இந்தியன் 2',  'பத்து தல', 'ருத்ரன்' போன்ற படங்களில் நடித்துவருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT