செய்திகள்

'ஊ சொல்றியா ?' - விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி

27th Aug 2022 12:53 PM

ADVERTISEMENT

 

விஜய் டிவியில் 'ஊ சொல்றியா' என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

விஜய் டிவி நிகழ்ச்சிகள் எப்பொழுதும் ரசிகர்களை ஈர்க்கத் தவறியதில்லை. சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, பிக்பாஸ், குக் வித் கோமாளி என ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கின்றன. 

அதற்கு காரணம் எப்பொழுதும் புதிய களத்துடன் கூடிய நிகழ்ச்சிகளைக் கலகலப்பாக கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்படுகிறது விஜய் டிவி. பெரும்பாலும் ஹிந்தி, ஆங்கில நிகழ்ச்சிகளை அப்படியே தமிழுக்கு ஏற்ப சுவாரசியமாக மாற்றுகின்றனர் அல்லது குக் வித் கோமாளி போன்ற புதிய நிகழ்ச்சியின் மூலமும் கவனம் ஈர்க்கின்றனர். 

ADVERTISEMENT

இதனையும் படிக்க | விஜய் டிவி தொடரிலிருந்து திடீரென விலகும் நடிகை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

அந்த வகையில் தற்போது ஊ சொல்றியா ஊஊ சொல்றியா என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களான மாகாப ஆனந்த் மற்றும் பிரியங்காவும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, சந்தோஷ் பிரதாப், பவித்ரா, சுனிதா போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி எதனை பற்றியது என்பது நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியானால் தெரிந்துகொள்ளமுடியும். 
 

Tags : Vijay TV
ADVERTISEMENT
ADVERTISEMENT