செய்திகள்

'பாஸ் என்கிற பாஸ்கரன் 2':மீண்டும் காமெடியனாக நடிக்கத் தயார் - சந்தானம் அதிரடி

26th Aug 2022 03:41 PM

ADVERTISEMENT

 

மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்கத் தயார் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக தகவல் பரவியது. இந்தத் தகவல் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கூடவே தற்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் கேப்டன் பட விழாவில் பேசிய சந்தானம், ஆர்யா எனக்கு ஒரு நல்ல நண்பர். என்னிடம் இரண்டு நாயகர்கள் படங்களில் நடிக்கவும், சிறப்பு வேடத்தில் நடிக்கவும் என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் நான் நடிக்கவில்லை. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என சொல்கிறீர்களா': விஷாலிடம் நீதிமன்றம் அதிரடி!

இப்பொழுது சொல்கிறேன். ஆர்யா, 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' படம் எடுத்தால் அதில் நான் நடிப்பேன். நான் நகைச்சுவை நடிகனாக நடித்துக்கொண்டிருக்கும்போது ஆர்யா என்னை உடற்பயிற்சி செய்ய வற்புறுத்துவார். அவர் பணம் போட்டு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். எல்லோரும் கண்டிப்பாக கேப்டன் படத்தைப்  பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT