செய்திகள்

தென்னிந்திய படங்களில் கதை இருக்கு, ஆனா.... - ஹிந்தி திரையுலகை விமர்சித்த அனுபம் கேர்

26th Aug 2022 01:21 PM

ADVERTISEMENT

 

ஹிந்தி படங்கள் மற்றும் தென்னிந்திய படங்கள் குறித்து நடிகர் அனுபம் கெர் பேசியது வைரலாகி வருகிறது. 

ஹிந்தி நடிகர் அனுபம் கெர் தமிழில் விஐபி, லிட்டில் ஜான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

தென்னிந்திய படங்களா? ஹிந்தி படங்களா ? என பெரும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் நடிகர் அனுபம் கெர் ஒரு பேட்டியில் இதுகுறித்து விரிவாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, சிறந்தவைகள் கூட்டு முயற்சியால் உருவாகும். இதனை நான் தெலுங்கு படங்களில் பணியாற்றும்போது கற்றுக்கொண்டேன். 

ADVERTISEMENT

இப்பொழுது ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறேன். தமிழிலும் ஏற்கனவே நடித்திருக்கிறேன். மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். ஆங்கிலப் படங்கள் போல அவர்கள் செய்வதில்லை. அவர்கள் படங்களில் கதை சொல்கிறார்கள். ஆனால் நாம் நட்சத்திரங்களை விற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

சமீப காலமாக தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ஹிந்தியில் பெரும் வெற்றிபெற்றன. தற்போது தெலுங்கு படமான கார்த்திகேயா 2 அங்கே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்தப் படத்துடன் வெளியான ஆமிர் கானின் லால் சிங் சத்தா, அக்ஷய் குமாரின் ரக்சா பந்தன் போன்ற படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. 

Tags : anupam kher
ADVERTISEMENT
ADVERTISEMENT