செய்திகள்

'இந்தியன் 2': கமலைப் புகழ்ந்து பதிவிட்ட ஆங்கில நடிகை - வெளியான சுவாரசியத் தகவல்

22nd Aug 2022 02:57 PM

ADVERTISEMENT

 

இந்தியன் 2 படத்துக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசனுடன் பிரபல ஹாலிவுட் நடிகை புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குபிறகு நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்துக்காக தயாராகிவருகிறார். இதற்காக தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். 

இந்தியன் முதல் பாகம் மற்றும் அவ்வை சண்முகி படங்களில் கமல்ஹாசனுக்கு ஒப்பனை செய்தவர் மைக்கேல் வெஸ்ட்மோர். தற்போது இந்தியன் 2 பட ஒப்பனைக்காக அவரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பகிரங்க மன்னிப்புக்கேட்ட 'விருமன்' பாடலாசிரியர்

இந்த சந்திப்பின்போது மைக்கேலின் மகளும் ஹாலிவுட் நடிகையுமான மெக்கென்சி வெஸ்ட்மோரும் உடனிருந்தார். மெக்கென்ஸி கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, உலகின் மிக இனிமையான இந்த இருவருடன் இருப்பது மகிழ்ச்சியும் பெருமையாகவும் இருக்கிறது. 

ஒருவர் எனது அப்பா, மற்றொருவர் கமல்ஹாசன் (இவரும் குடும்பத்தில் ஒருவர்) இவரை உங்களுக்கு தெரியவில்லையென்றால் கமலின் புதிய படமான விக்ரம் படத்தைப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT